in

மயிலாடுதுறையில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில் பணியாற்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

மயிலாடுதுறையில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில் பணியாற்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரஃபீக்(52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவராக உள்ள இவர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார்.

இவரது கடையில் 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்துள்ளார்.பெற்றோரை பிரிந்து வந்த அச்சிறுமியை தனியார் பெண்கள் காப்பகத்தில் சேர்த்து முகம்மது ரஃபீக் உதவி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமியிடம் முகம்மது ரஃபீக் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது ரஃபீக்கை கைது செய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கட்சி பிரமுகர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

12 ஜோதிர் லிங்கங்களில் சாமி தரிசனம் செய்யவும் பல நூறு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் முறையில் பயணம் செய்யும் உத்தரப்பிரதேச மாநில இளைஞர்

மதுபோதையில் லாரியை(ஈச்சர்) இயங்கிய ஒட்டுநர் – புளிய மரத்தின் மோதி விபத்து