DNA .. Emotions ரசிகர்களை Connect செய்திருகிறதா?…. DNA திரை விமர்சனம்
தமிழ் சினிமா பெரும்பாலும் திருமணத்தில் ஏற்பாடும் சிக்கல்களை சொல்லியிருகிறது.
கட்டாயத் திருமணத்தால் ஏற்படும் பிரச்சனை, முதல் காதல், காதல் தோல்வி, என்று நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால். காதல், இழப்பு மற்றும் தனிமை பற்றிய ஒரு பார் பாடலுடன் DNA தொடங்குகிறது.
ஏன் இந்த பாடல் என்ற கேள்வி நமக்குள் வருவதற்குள் முழு பாடலும் ஆதர்வாவின் (ஆனந்த்) பின்னணியை நமக்கு புரியவைத்து விடுகிறது.
ஆனந்த் ஏன் ஒரு குடிகாரனாகவும், போதைப்பொருள் அடிமையாகவும் இருக்கிறார், பேராசிரியர்கள் மற்றும் படிப்பாளிகள் நிறைந்த ஒரு வீட்டில் பிறந்து அவப்பெயரின் முன்னோடியாக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது( காதல் தோல்விதாங்க).
ஆனால், படித்த குடும்பமாக இருந்தபோதிலும், அவர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள், அவரை சரி செய்ய மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புகிறார்கள். மனநலம் பெற்று திரும்பி வருகிறார் .
திவ்யா (நிமிஷா சஜயன்) மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், மறைத்து ஆதர்வாவிற்கு திருமணம் செய்துவைகிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கும்போது, சோகம் ஏற்படுகிறது – மருத்துவமனையில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை தன்னுடைய குழந்தை அல்ல என்பதை திவ்யா கண்டுபிடிக்கிறாள்.
ஆரம்பத்தில் திவ்யாவை சந்தேகிக்கும் ஆனந்த், இறுதியில் அவரை நம்பி DNA டெஸ்ட் எடுக்கிறார், ரிப்போர்ட் படி அது தன்னுடைய குழந்தை இல்லை என்று தெரிய காணாமல் போன தங்கள் குழந்தையைக் கண்டுபிடிக்க காவல்துறையின் உதவியை நாடுகிறார் அதர்வா.
ஆனந்த் மற்றும் போலீஸ் அதிகாரி சின்னசாமி (பாலாஜி சக்திவேல்) காணாமல் போன குழந்தையை விசாரிக்கத் தொடங்கும்போது, திரைக்கதை வேகமெடுக்கிறது. அதர்வா குழந்தையை கண்டு பிடித்தாரா? திருட்டுக்கான பின்னணி என்ன? என்பதை சொல் வருகிறது DNA…. தொடக்கத்தில் பிரேக் அப் காட்சிகளாக இருந்தாலும் சரி, டிவி சீரியல் பாணியிலான க்ளைமாக்ஸாக இருந்தாலும் சரி, ஒரு தேவையற்ற பாடலின் சேர்க்கையாக இருந்தாலும் சரி, பார்வையாளர்களிளுக்கு கொடுக்க விரும்பியதை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
இருக்கைகளின் விளிம்பில் உட்கார வைக்கும் அளவிற்கு சில காட்சிகள் சிலிர்க்க வைகிறது. இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் DNA இல் திருமணம்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு, குறிப்பாக மனநலப் பிரச்சினைகளுக்கு என்ற தமிழ் சினிமாவின் பழங்காலக் கருத்தை மீண்டும் அழுத்தி சொல்லி இருக்கிறார்.
மனநல மதிக்கபட்ட அதர்வாவும் , குழந்தையை இழந்த தந்தையாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்த நிமிஷா சஜயனின் உணர்ச்சி ததும்பும் நடிப்பால் நம்மை அழ வைக்கிறார்.
அதர்வாவும் நிமிஷாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி, ரமேஷ் திலக் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்
குழந்தையை கடத்தும் பாட்டி ஒரு சீனில் மிரட்டிவிட்டு செல்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே. க்ளைமாக்ஸில் மெலோடிராமா Work அவுட் ஆகி இருக்கிறது. DNA Emotional Thriller.. நீங்கள் த்ரில்லர் படங்களை விரும்புபவராக இருந்தால், நெல்சன் வெங்கடேசனின் ‘டிஎன்ஏ’ உங்கள் பெஸ்ட் சாய்ஸ்.