in

மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவாடானை அருகே மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பொட்டக்கோட்டையில் சாலை ஓரம் இருந்த மரம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை தாலுகா பொட்டக்கோட்டை பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலவம் பஞ்சு மரம் ஒன்று இருந்தது. மரம் பட்டுப்போய் காய்ந்த நிலையில் காணப்பட்டது.

 

இந்நிலையில், இரவு அந்த மரத்தின் அருகே கிடந்த குப்பைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.​குப்பையில் எரிந்த தீ, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த காய்ந்த இலவம் பஞ்சு மரத்திற்கும் பரவியது. மரம் மளமளவென எரியத் தொடங்கியதால் அந்த இடமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

தீ எரிந்த இடத்திற்கு மிக அருகிலேயே மின்கம்பங்கள் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியத் துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்தனர்.

​அதனைத் தொடர்ந்து, திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி மரத்தில் எரிந்த தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, மின் வாரியத்தினர் மீண்டும் மின் விநியோகத்தை வழங்கினர்.தீயணைப்பு வீரர்களின் துரிதமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

What do you think?

தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை… கேஸ் சிலிண்டரும் இல்லை!”  திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாத்திமா பீபி 1447 வது கண்டு கந்தூரி விழா. கொடியேற்றி சந்தனம் பூசப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.