பத்திரிகையாளர்களை தாக்க ஆவேசமாக வந்த சீமான்
செஞ்சியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை சட்டையை மடித்துக் கொண்டு தாக்க ஆவேசமாக வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ….
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள செஞ்சி கோட்டையை யுனோஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த நிலையில் தமிழர்களின் வரலாற்றை மறைத்து மராத்தியர்கள் கட்டிய கோட்டையாக அறிவிப்பு செய்ததை கண்டிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியவரும் நிலையில் இன்று செஞ்சி இந்தியன் வங்கி எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோனேரிகோன் கட்டிய கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேச ஆரம்பித்தபோது செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றனர் அப்போது நாம் தமிழர் கட்சியின் பாதுகாவலர்கள் செய்தியாளர்களை அனுமதிக்காமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவதை நிறுத்திவிட்டு மேடையில் இருந்து ஆவேசமாக செய்தியாளர்களை தாக்குவிதமாக ஓடி வந்த காட்சி அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே செஞ்சி காவல் துறையினர் செய்தியாளர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர் இதனால் அப்பகுதியில் ஒரு சிறிது நேரம் சலபலப்பும் பரபரப்பு ஏற்பட்டது


