in

கொட்டும் மழையில் 10 டன் தீபாவளி குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

கொட்டும் மழையில் 10 டன் தீபாவளி குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

 

தஞ்சையில் கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் 10 டன் தீபாவளி குப்பைகளை அகற்றினர்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் சேர்த்து ஒன்றரை டன் முதல் இரண்டு டன் வரையில் குப்பைகள் அள்ளப்படும்.

ஆனால், தீபாவளிக்காக சாலை ஒரங்களில் தற்காலிகமாக கடைகள் விட்டு சென்ற குப்பைகள், மக்கள் கொளுத்திய பட்டாசு குப்பைகள என நகர், முழுவதும் குப்பை மேடாக காட்சி அளித்தது.

அரசு அலுவலகங்கள் விடுமுறையாக இருந்தாலும், அதிகாலை 4 மணிக்கே பணிக்கு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொட்டும் கன மழையிலும் மாநகர் முழுவதும் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளி நகரை தூய்மையாக்கினர்.

வழக்கத்தை விட 5 மடங்கு குப்பைகளை அகற்றி உள்ளனர்.

சுமார் 10 டன் குப்பைகள் அள்ளப்பட்டு உள்ளன.கொட்டும் மழையில் பணியில் ஈடுப்பட்டு இருந்த தூய்மை பணியாளர்களுக்கு சமூக சேவகர ஒருவர் சுடச்சுட

டீ பிஸ்கட் வழங்கி அவர்களது களைப்பை போக்கினார்.

What do you think?

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவினை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தமிழ்நாட்டிற்கு மழை எச்சரிக்கை