in

தூய்மை பணியாளர்கள் சமைக்கும் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் சமைக்கும் போராட்டம்

 

மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுடன் தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் தங்களுக்கான உணவை தயார் செய்வதற்காக காய்கறிகளை நறுக்கி வருகின்றனர்.

சமைப்பதற்காக அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாநகராட்சி வளாகத்திற்குள் சமைக்க சட்டத்தில் இடமில்லை அதனால் இங்கு சமைக்க கூடாது என தெரிவித்தனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் லேசான வாய் தகராறு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் சமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பாலசுப்பிரமணியன்

மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

ஆகவே, தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஆணையாளர் பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.

அரசின் கொள்கை முடிவுகளை எதிர்க்கிறோம் என்பதை தமிழக அரசிற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி உள்ளோம்.

போராட்டத்திற்கான காரணங்களையும், கோரிக்கைகளையும் தமிழக அரசிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்திருக்கிறோம்.

 

மாநகராட்சிக்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்றுள்ள ஒப்பந்தத்தில் வெளிப்படத் தன்மை இல்லை.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாத காரணத்தால் தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

What do you think?

பாதுகாப்பு படை வீரர் தாக்கியதாக புகார் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது