மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்.

கதிர்வேல் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார்,
மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன்,முன்னிலையில் பொங்கல் விழா இசை நாற்காலி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் கொண்டாடப்பட்டது .
இதேபோன்று வரதாச்சாரியார் பூங்காவில் மயிலாடுதுறை நகராட்சி சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் மிஸ்பா இணைந்து நடத்தும் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நகர் மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து சமத்துவ பொங்கல் இட்டு உரியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


