in

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது…

புதுச்சேரி, முத்தியால்பேட்டை ராமகிஷ்ணா நகரில் லட்சுமிஹயக்ரீவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சி.பி. எஸ்.இ. மற்றும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் கல்வி சிறக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் லட்சுமி ஹயக்ரீவர் பெருமா ளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

அதாவது இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக காலை 10.30 மணிக்கு மாணவர்களின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து பூஜை நடைபெற்றது.

மேலும் சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந் துகொள்ளும் பக்தர்களுக்கு சகஸ்ரநாம புத்தகம், பேனா, தேன் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற் பாடுகளை ஸ்ரீவேத ஆக சம்பரக்ஷன லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்..

What do you think?

சட்டப் போராட்டத்துல இறங்கியிருக்காங்க காங்கிரஸ் முன்னாள் எம்.பி-ரம்யா (என்கிற திவ்யா ஸ்பந்தனா)

மார்ட்டின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அமைச்சர் ஜான் குமார் சார்பில் பொதுமக்களுக்கு தடபுடலான அசைவ விருந்து அளிக்கப்படும் பரிசுகள் வழங்கப்படும்.