தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்ற ரஷ்யா கஜகஸ்தான் நாட்டினர்
தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்ற ரஷ்யா கஜகஸ்தான் நாட்டினர் ஆஸ்தானமாக விழுந்து வணங்கி ஆசி பெற்று திருநீர் பூசி கொண்ட வெளிநாட்டினர். மனம் உருகி சிவனை வேண்டி பாடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன மடத்தில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகளை மடத்தில் ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினர் சந்தித்து ஆசி பெற்றனர்.
அப்பொழுது ஆதினத்திடம் ஆஸ்தானமாக விழுந்து வணங்கி திருநீர் பூசிக்கொண்டு ஆசி பெற்றனர்.
அனைவருக்கும் மடத்தின் சார்பில் சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவரும் ஆதீனத்திடம் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் வெளிநாட்டினர் ஒருவர் மனம் உருகி சிவனை வழிபட்டு பாடினார்.
ஆதீன மடத்தில் உள்ள கலைப் பொருள்களை பார்வையிட்டு வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


