in

தேர்தல் நேரத்தில் வீதியில் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 74 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்: கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் வீதியில் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 74 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்: கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கீழையூர் கடைத்தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சேர்ந்த முகம்மது ராவுத்தர் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.74 ஆயிரம் 100 இருந்தது தெரிய வந்தது .

இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஸ்வரி இடம் ஒப்படைத்தனர் ‌பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

What do you think?

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத முதல் பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு