in

PS 2 பாடலுக்கு இசை அமைத்தற்காக ரூ.2 கோடி அபராதம்…  மாட்டிகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்

PS 2 பாடலுக்கு இசை அமைத்தற்காக ரூ.2 கோடி அபராதம்…  மாட்டிகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தனது பாடலை உபயோகப்படுத்தியதற்காக அபராதம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பவர் இளையராஜா ஆனால் தற்பொழுது பிரபல இசையமைப்பாளர் ஒருவர் காப்பீடு விஷயத்தில் மாட்டி கொண்டு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏ ஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கும் இசையமைத்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் வீரா ராஜா வீரா என்ற பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை உருவாக்கிய சிவா ஸ்ருதி பாடலை காப்பி அடித்து இருப்பதாக ஏ ஆர் ரகுமான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் துருபத் மேஸ்ட்ரோ மற்றும் பத்மஸ்ரீ உஸ்தாத் வாசிஃபுதீன் தாகர் ஆகியோரால் வழக்கு தொடரபட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீர ராஜ வீராவின் இசையமைப்பு சிவ ஸ்துதியிலிருந்து நகலெடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தாகரின் தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இயற்றப்பட்டது. பிரதிவாதிகள் பாடலைப் பயன்படுத்துவதைத் தடுக்க நிரந்தரத் தடை உத்தரவை தாகர் கோரினார்.

மேலும் ரூ.2 கோடி இழப்பீடும் கேட்டார். ஃபயாஸ் தாகரின் குற்றச்சாட்டுகளை மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான், ஷிவ் ஸ்துதி என்பது துருபத் வகை பாரம்பரிய இசையமைப்பு என்றும், இதை யார்’ வேண்டும் அனாலும் உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.

வீர ராஜா வீர பாடல் 227 தனித்துவமான அடுக்குகளைக் கொண்ட மேற்கத்திய இசை அடிப்படைகளைப் பயன்படுத்தி இயற்றப்பட்ட ஒரு அசல் படைப்பு என்றும், இது “இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மரபுகளுக்கு அப்பாற்பட்டது” என்றும் அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் வாதிட்டார்.

வீர ராஜா வீர’ பாடல் சிவ ஸ்துதியின் இசையமைப்பை அடிப்படையாகக் கொண்டது அல்லது, சில மாற்றங்களுடன் அதைப் போலவே இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தீர்ப்பின் அடிபடையில் ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ₹2 கோடியை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய நீதிபதி பிரதிபா எம் சிங் உத்தரவிட்டார்.

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை மாதம் பிரதோஷம்

மாளவிகா மோகனன், பெண்களை தரக்குறைவாக நடத்தும் ஹீரோக்களை கடுமையாக சாடியுள்ளார்