in

நிச்சயதார்த்தம் புகை படங்களை வெளியிட்ட RRR பாடகர் ராகுல்

நிச்சயதார்த்தம் புகை படங்களை வெளியிட்ட RRR பாடகர் ராகுல்

 

ஆஸ்கார் விருது பெற்ற RRR பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடலின் பாடகரும் , பிக் பாஸ் தெலுங்கு 3 ..இன் வெற்றியாளருமான ராகுல் சிப்லிகுஞ்ச்..க்கு ஆகஸ்ட் 17 அன்று ஹரிண்யா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நேற்று , இந்த ஜோடி தங்கள் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ராகுல் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் 2009 ஆம் ஆண்டு தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய, தெலுங்கு இசை வீடியோக்களை உருவாக்கும் ஒரு இண்டி (Indie Artist …டாக புகழ் பெற்றார்.

அதே ஆண்டு படங்களில் பாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றார், நாக சைதன்யா நடித்த ஜோஷ் படத்திற்காக காலேஜ் புல்லோடா என்ற பாடலை பாடினார்.

பல ஹெட் பாடல்களை பாடினாலும்’, அவரது வாழ்க்கையை மாற்றிய பாடல், எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆரில் நாட்டு நாட்டு, பாடலை கால பைரவாவுடன் இணைந்து பாடினார்.

இந்தப் பாடல் ஆஸ்கார் விருதை வென்ற பிறகு, தெலுங்கானா அரசு அவருக்கு ₹1 கோடி ரூபாய் விருதை வழங்கி கௌரவித்தது.

பாடுவதைத் தவிர, பிக் பாஸ் தெலுங்கின் சீசன் 3 இல் பங்கேற்று வெற்றி பெற்றார்.

ராகுல் சூப்பர் சிங்கர் 3 இன் நடுவர்களில் ஒருவராகவும் இருந்தார். ராகுல் 2023 இல் ரங்கமார்த்தண்டா படத்தில் நடிகராக அறிமுகமானார்.

What do you think?

இரண்டாம் மாநில மாநாட்டிற்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்த விஜயின் பெற்றோர்

டிவிகே..வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு மதுரை வந்த தலைவர் விஜய்