கதறி அழுது வீடியோ வெளியிட்ட ரியா தியாகராஜன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ல் கலந்து கொண்ட ரியா தியாகராஜன் wildcard என்ட்ரி.யாக நுழைந்தவர் இரண்டும் வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார். ரியா இன்ஸ்டாகிராமில் கதறி அழுது ஒரு வீடியோ வெளியிட்டு followers..யை அழ வைத்திருக்கிறார்.
எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டைகள் வந்து கொண்டிருக்கும் அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறேன் அவர் எங்கே போய் விட போகிறார் என்று நம்பிக்கையில் அவருடன் சண்டை போடுவேன் ஆனால் திடீரென்று என் அப்பா விபத்தில் சிக்கி இறந்த பிறகு தான் என் வாழ்க்கைக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன் என்ன பிரச்சனையாக இருந்தாலும் பெற்றவர்கலுடன் பேசாமல் இருக்காதீர்கள் பார்க்கப்போகாமல் இருக்காதீர்கள் என் வாழ்க்கையில் நான் செய்த தவறுகளை நீங்கள் யாரும் செய்யாதீர்கள் என்று கூறி இருக்கிறார்..வாஸ்தவம் தான்..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் சுகமாக இருக்க சுமைகளை சுமப்பவர்கள் பெற்றோர்கள்.


