in

காற்றில் கலந்த கானக்குயில் மெலடி குயின்: ஆஷா போஸ்லேவின் குரல் இனி இல்லை!

காற்றில் கலந்த கானக்குயில் மெலடி குயின்: ஆஷா போஸ்லேவின் குரல் இனி இல்லை!

 

இந்திய இசை உலகமே இன்னைக்கு ஒரு பேரிழப்பைச் சந்திச்சிருக்கு. இசைக்குயில் லதா மங்கேஷ்கரோட தங்கை, நம்ம எல்லாரோட ஃபேவரிட் பாடகி ஆஷா போஸ்லே (92) இன்னைக்கு காலமானார்.

மார்புத் தொற்று காரணமா மும்பை மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனில்லாம நம்ம எல்லாரையும் விட்டுப் பிரிஞ்சு போயிட்டார்.

ஆஷா போஸ்லே சும்மா சாதாரணமான ஆள் இல்லங்க! தன்னோட 10 வயசுலயே பாட ஆரம்பிச்சவங்க. 1943-ல ஒரு மராத்தி படத்துல ஆரம்பிச்ச அந்தப் பயணம், கிட்டத்தட்ட 80 வருஷங்களுக்கும் மேல நீடிச்சது.

கஜல், பஜன், பாப்னு எல்லா வெரைட்டியும் அவங்களுக்கு அத்துப்படி. அதனாலதான் இவங்களை *’மெலடி குயின்’*னு கொண்டாடுறாங்க.

தமிழ் ரசிகர்கள் மனசுலயும் ஆஷா போஸ்லே ஒரு நீங்காத இடத்தைப் பிடிச்சிருக்காங்க.
“செண்பகமே.. செண்பகமே..””ஓ.. பட்டர் பிளை.. பட்டர்பிளை..” “செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்..” சந்திரமுகி படத்துல வர்ற அந்த “கொஞ்சநேரம் கொஞ்சநேரம்..”

இப்படி இன்னைக்கும் நம்ம பிளேலிஸ்ட்ல இருக்குற எத்தனையோ ஹிட் பாடல்களைப் பாடினது இவங்கதான்!

இவங்க செஞ்ச சாதனைகளை அடுக்கிக்கிட்டே போகலாம்: உலகத்திலேயே அதிக பாடல்களை (12,000-க்கும் மேல!) பாடின பாடகி இவங்கதான்.இந்தியாவில இருந்து கிராமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்.

பத்மவிபூஷண், 2 தேசிய விருதுகள்னு இவங்க வாங்காத விருதுகளே இல்லை. தன்னோட 91 வயசுல கூட “The Shadowy Light” அப்படிங்கிற ஒரு பாட்டைப் பாடி, கடைசி வரைக்கும் இசையைத் சுவாசிச்ச அந்தப் பெரும் கலைஞர், இப்போ காத்துல கரைஞ்சுட்டாங்க.

ஆஷா போஸ்லேவோட குரல் அழியாத காவியமா நம்ம கூடவே இருக்கும். இந்த மாபெரும் கலைஞருக்கு நம்ம சேனல் சார்பா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிச்சுப்போம். உங்களுக்கு அவரோட பாடல்கள்ல எது ரொம்ப பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க!


Watch – YouTube Click Shorts

What do you think?

ராமராஜன் பிரசாரம் ஆலங்குளத்துல ஓட்டுகளை அள்ளுமா?