மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வாகனம் ஓட்டும் தொழிலாளி வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தினேஷ் பாபு இவர் தற்போது மயிலாடுதுறை விளநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரக்திக்ஷா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன தினேஷ் பாபு மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் நேற்று மாலை அவர் வீட்டிற்கு வரக்கூடிய மின்சார கம்பி, மின் தடைபட்டுள்ளது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரும் இவரும், சேர்ந்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை நேற்று தினேஷ் பாபுவின் மனைவியான பிரக்திக்ஷா துவைத்த துணிகளை காய வைக்கும் பொழுது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
அவரைக் காப்பாற்ற சென்ற அவரது கணவரான தினேஷ் பாபு மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரது உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உடற் கூராய்வுக்காக கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனையிலிருந்து அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


