ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட் பத்தி ஓபன் டாக்
தமிழ், தெலுங்குன்னு தென்னிந்திய சினிமாவுல கலக்கிட்டு இருக்குற நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்போ பாலிவுட் பத்திப் போட்டிருக்கிற ஒரு கமெண்ட் சோஷியல் மீடியால செம ‘ஹாட்’ டாபிக்கா போயிட்டு இருக்கு.
சமீபத்துல ஒரு பேட்டியில ரெஜினா ரொம்ப வருத்தப்பட்டு சில விஷயங்களைச் சொல்லிருக்காரு: “இந்தி சினிமாவுல இருக்குற ஒரு சிலர் என்னை வார்த்தையாலயும், செயலாலயும் ரொம்ப மோசமா நடத்துனாங்க.
அது எனக்குப் பெரிய வேதனையைக் கொடுத்துச்சு”னு சொல்லிருக்காரு. “நான் ஒரு தென்னிந்திய நடிகையா இருந்தாலும், எனக்கு மத்தவங்களை விட இந்தி நல்லாவே பேசவும், எழுதவும் தெரியும்.
என் கேரக்டரை அவ்வளவு கவனமா செஞ்சு கச்சிதமா நடிக்கிறேன். ஆனாலும் என்னை இப்படி நடத்துறது ஏன்னு புரியல”னு தன்னோட ஆதங்கத்தைக் கொட்டியிருக்காரு.
தென்னிந்திய நடிகைகளை பாலிவுட்ல இன்னைக்கும் ஏதோ ஒரு விதத்துல தள்ளி வைக்கிறாங்களோ அப்படிங்கிற விவாதத்தை ரெஜினாவோட இந்தப் பேச்சு மறுபடியும் கிளப்பிருக்கு.
இவ்வளவு ஓப்பனா ரெஜினா பேசுனதுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றாங்க.
