in

அரசு தொடக்கப்பள்ளியில் வாசித்தல் திருவிழா

அரசு தொடக்கப்பள்ளியில் வாசித்தல் திருவிழா

 

தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாசித்தல் திருவிழா, வாகனங்கள் தினம் (vehicles day) மற்றும் சமூக உதவியாளர்கள் தினம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாசித்தல் திருவிழா, வாகனங்கள் தினம் (vehicles day) மற்றும் சமூக உதவியாளர்கள் தினம் (Community helpers day) ஆகியவை வட்ட துணை ஆய்வாளர் அனிதா தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்று சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வில் முன் மழலையர் பள்ளி மாணவர்கள் சமுக உதவியாளர்கள் போல் உடையணிந்து அசத்தினர். மேலும் பல்வேறு வகையான வாகனங்களின் கண்கவர் மாதிரி உருவங்கள் இவ்விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறனை வெளிப்படுத்தும் வகையில் கதைகள், செய்திதாள், பத்திரிக்கை போன்றவற்றை மாணவர்கள் படித்து காட்டினர்.

இவ்விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் வாசித்தல் திறனை கண்டு வியந்தனர்…

இறுதியாக வட்டம் பள்ளி துணை ஆய்வாளர் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் நித்யா, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, பிரேமா, காயத்ரி, அருணா, கண்ணிகா, உமாதேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

What do you think?

பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு