in

விமர்சகர்களை ஓடவிட்ட ரவி மோகன்! இன்ஸ்டாகிராமில் வெடித்த உரிமைப் போர்!


Watch – YouTube Click

விமர்சகர்களை ஓடவிட்ட ரவி மோகன்! இன்ஸ்டாகிராமில் வெடித்த உரிமைப் போர்!

கடந்த 15 வருஷமா கோலிவுட்டோட ‘பெஸ்ட் கப்புள்’னு சொல்லப்பட்ட ரவி மோகன் – ஆர்த்தி ஜோடி பிரிஞ்சது இப்போ வரைக்கும் ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சிதான்.

ரெண்டு பசங்க இருக்குற நிலையில, கடந்த 2024-ல ரவி மோகன் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனது பெரிய சர்ச்சையாச்சு.இந்த விவாகரத்து முடிவுக்குப் பின்னால பாடகி கெனிஷா இருக்காங்கன்னு ஒரு பக்கம் கிளப்பி விட்டாங்க.

அவங்க ரெண்டு பேரும் பொது நிகழ்ச்சிகள்ல ஜோடியா சுத்துறதை வச்சு சோசியல் மீடியாவுல ஏகப்பட்ட கமெண்ட்ஸ். “15 வருஷ வாழ்க்கையை இப்படி ஒரு பாடகிக்காக உதறிட்டாரே”னு ரவி மோகனைப் பலரும் விமர்சனம் பண்ணிட்டு வர்றாங்க.இத்தனை நாள் அமைதியா இருந்த ரவி மோகன், இப்போ தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு பதிவைப் போட்டு விமர்சகர்களுக்கு செம பதிலடி கொடுத்திருக்காரு. அவர் சொன்னது இதுதான்:

“நான் இப்போ என்னோட வாழ்க்கையை ரொம்ப அமைதியா புதுசா கட்டி எழுப்பிட்டு இருக்கேன். நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க, எனக்குக் கவலை இல்லை. என்னோட மனசுக்கும், நான் நேசிக்கிறவங்களுக்கும் நான் என்ன செஞ்சேன்னு ஒருநாள் உங்களுக்குத் புரியும். ஒரு மனுஷனை அமைதியா வாழ விடுங்கப்பா! உங்களோட அந்த கேவலமான எண்ணங்களை நீங்களே வச்சுக்கோங்க. நான் என் வழியில போயிட்டே இருப்பேன்”னு ரொம்பவே ஆவேசமா சொல்லிருக்காரு.இந்த பதிவோட சேர்த்து ‘வாழ்க்கை என்பது அன்பினில்’ அப்படிங்கிற பாட்டையும் பேக்ரவுண்ட்ல வச்சு ஒரு வீடியோவை வெளியிட்டுருக்காரு. இது மூலமா, தான் யாரையும் பத்தி கவலைப்படாம சந்தோஷமா இருக்கேன்னு அவர் சொல்ல வர்றாரு.

What do you think?

சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பட்டுக்கோட்டையில் இன்று காலை தேர்வுக்கு சென்ற மாணவர்களை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு.