சர்ச்சையில் கொதித்தெழுந்த ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்பூர்ல பிரம்மாண்டமா கல்யாணம் நடந்துச்சு. இப்போ தான் அவங்க புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காங்க.
ஆனா, இந்த நேரத்துல ராஷ்மிகாவோட பழைய காதலைப் பத்தின ஒரு ஆடியோ சோசியல் மீடியாவுல தீயாய் பரவி சர்ச்சையை கிளப்பியிருக்கு.ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி அப்புறம் நின்னு போனது எல்லாருக்கும் தெரியும்.
இப்போ ராஷ்மிகாவோட அம்மா பேசுனதா ஒரு பழைய ஆடியோ வைரலாகிட்டு இருக்கு. அதுல, “ரக்சித் குடும்பத்துல ராஷ்மிகாவை சினிமாவை விட்டு விலகச் சொன்னாங்க, அதனால தான் கல்யாணம் நின்னுச்சு”ங்கிற மாதிரி சில விஷயங்கள் இருக்கு.
இது ராஷ்மிகாவோட இப்போதைய திருமண வாழ்க்கையைச் சீர்குலைக்கப் பார்க்கிறதா அவதூறு பரப்பப்பட்டு வருது.இந்த விவகாரத்துல பொறுமை இழந்த ராஷ்மிகா, எக்ஸ் (X) தளத்துல ஒரு அதிரடியான பதிவு போட்டிருக்காரு. அதுல அவர் சொன்னது இதோ: “என்னை டார்கெட் பண்ணித் தப்பான தகவல்களைப் பரப்புறது கடந்த 8 வருஷமா நடந்துட்டு தான் இருக்கு. வியூஸ்க்காக நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் கதையா கட்டி விடுறாங்க.
ஆனா கடந்த 24 மணி நேரமா நடக்குற விஷயங்கள் எல்லையைத் தாண்டிப் போயிட்டு இருக்கு.””8 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு பெர்சனல் விஷயத்தை, அனுமதி இல்லாம ரெக்கார்ட் பண்ணி இப்போ பரப்பிட்டு இருக்காங்க.
அந்த ஆடியோவுல கூட ஒரு பகுதியை மட்டும் கட் பண்ணி, தப்பான அர்த்தம் வர்ற மாதிரி எடிட் பண்ணிருக்காங்க. நான் இப்போ தான் கல்யாணம் ஆகி புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன்.
இந்த நேரத்துல என் குடும்பத்தை இழுத்துப் பேசுறதை என்னால ஏத்துக்க முடியாது. அந்த வீடியோவை போட்ட ஊடகங்களும், இன்ப்ளுயன்சர்களும் அதை உடனே டெலீட் பண்ணுங்க. இல்லைன்னா சட்டப்படி ஆக்ஷன் எடுப்பேன்”னு செம காட்டமா சொல்லிட்டாரு.
புதுப் பொண்ணு ராஷ்மிகாவோட இந்த கோபம் நியாயம் தான் அப்படின்னு ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க!


