மெகா பவர் ஸ்டார் ராம் சரண், இப்போ ஜான்வி கபூர் மற்றும் நம்ம கருப்பு நிலா சிவராஜ்குமார் கூட சேர்ந்து ‘பெத்தி’ (Peddi) படத்துல நடிச்சுட்டு இருக்காரு.
இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வர்ற தகவல்கள் இப்போ ரசிகர்களை மெய்சிலிர்க்க வச்சிருக்கு!
இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இந்தப் படத்துல ராம் சரணை ஒரு வெறித்தனமான மல்யுத்த வீரரா காட்டப்போறாரு.
அதுக்காக ராம் சரண் சும்மா ஜிம்முக்கு போயிட்டு வரலைங்க, கிட்டத்தட்ட 8 மாசம் ஒரு நாள் கூட லீவ் போடாம செம கடுமையான டிரையினிங் எடுத்துருக்காரு.
ஒரு நிஜ மல்யுத்த வீரரோட உடலமைப்பு எப்படி இருக்குமோ, அதே மாதிரி இப்போ கட்டுமஸ்தான உடம்பை கொண்டு வந்துட்டாரு!
இயக்குநர் புஜ்ஜி பாபுவை ரொம்பவே ஆச்சரியப்படுத்தின விஷயம் என்னன்னா, ராம் சரண் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த அந்த டைம் தான்.
அந்த 41 நாளும் சாமிக்கு மாலை போட்டிருக்கிறதுனால ரொம்பவே கட்டுப்பாடா இருக்கணும்.
ஆனா, ராம் சரண் அந்த நேரத்துலயும் தன்னோட பயிற்சியை நிறுத்தவே இல்லையாம்!
முழுக்க முழுக்க சைவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கிட்டு, ஒரு பக்கம் ஆன்மீக ஒழுக்கத்தையும் கடைபிடிச்சு, இன்னொரு பக்கம் மல்யுத்த வீரருக்கான அந்த உடம்பையும் மெயிண்டன் பண்ணிருக்காரு.
ராம் சரணோட இந்த அர்ப்பணிப்பைப் பார்த்து மொத்த யூனிட்டுமே மிரண்டு போயிருக்காங்க!
ரத்னவேலுவோட கேமரா, ஏ.ஆர். ரஹ்மானோட மியூசிக்னு இந்தப் படம் ரொம்பவே பிரம்மாண்டமா உருவாகிட்டு இருக்கு.
சமீபத்துல ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வந்த க்ளிம்ப்ஸ்-ல அவரோட அந்த ”பீஸ்ட் லுக் இப்போ சோசியல் மீடியாவுல காட்டுத்தீயா பரவிட்டு இருக்கு!
ராம் சரண் சும்மாவே ஸ்கிரீன்ல தெறிக்க விடுவாரு, இதுல மல்யுத்த வீரர் வேற.. கேட்கவா வேணும்? தியேட்டர்ல கண்டிப்பா சம்பவம் இருக்கு!

