in

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி.

 

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி உலக கைம்பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் தனித்து வாழ வேண்டும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நாளில் பல்வேறு விழிப்புணர் வேதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல சங்கம், விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல் நிலையம் அருகில் டி எல் சி சர்ச் எதிரில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பேரணியாக வந்தனர். கைம்பெண்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும், இதற்காக பெண்கள் நலத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும், நலவாரிய அட்டைகளை வழங்க வேண்டும், கைம்பெண்கள் உதவித்தொகை மாதம் 3 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், மதுபான கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மகளிர், கோரிக்கைகள் வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் பங்கேற்றனர்.

What do you think?

எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இருளர் மக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்