in

பல வருஷங்களுக்கு அப்புறம் கைகோர்த்திருக்காங்க ரஜினி கமல்

பல வருஷங்களுக்கு அப்புறம் கைகோர்த்திருக்காங்க ரஜினி கமல்

 

தமிழ் சினிமாவோட ரெண்டு துருவங்கள்னு சொல்லப்படுற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் பல வருஷங்களுக்கு அப்புறம் ஒரு படத்துக்காக கைகோர்த்திருக்காங்க.

ஆனா இந்தத் தடவை ஒண்ணா சேர்ந்து நடிக்கல… கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கப்போறாரு! ‘தலைவர் 173’ படத்தோட டைரக்டர் யாருன்னு கடந்த சில வாரங்களா சோஷியல் மீடியால ஏகப்பட்ட விவாதங்கள் ஓடுச்சு.

முதல்ல சுந்தர்.சி இயக்குவாருன்னு சொல்லப்பட்டது, ஆனா அவர் இப்போ ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்துல பிஸியா இருக்கறதால விலகிட்டாரு.

அதுக்கப்புறம் கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போச்சு.ஆனா இப்போ எல்லா யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு.

சிவகார்த்திகேயனோட ‘டான்’ படத்தைக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி தான் நம்ம தலைவரோட 173-வது படத்தை இயக்கப்போறாரு!

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு: கமல் சார் தன்னோட சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமா ரஜினி சாரை வச்சு தயாரிக்கிற முதல் படம் இது.

‘டான்’ படத்துல செம ஜாலியான ஸ்கிரீன் பிளே கொடுத்த சிபி சக்கரவர்த்தி, சூப்பர் ஸ்டாரை எப்படி காட்டப்போறாருன்னு ரசிகர்கள் செம ஆர்வமா இருக்காங்க.

கமல் – ரஜினி காம்போனாலே பட்ஜெட்ல குறைவே இருக்காது, இது ஒரு பிரம்மாண்டமான கமர்ஷியல் படமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

What do you think?

நயன்தாராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள் “தமிழ்னா கசக்குதா? தெலுங்குனா இனிக்குதா?” விமர்சிக்கும் ரசிகர்கள்

ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி