மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 வென்ற ராஜஸ்தான் அழகி மாணிகா விஸ்வகர்மா
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் 74 வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 48 அழகிகள் போட்டியிட்டனர்.
இறுதியில் 22 வயதான மாணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.
இவருக்கு கடந்த ஆண்டு இந்த போட்டியில் பங்கேற்று பட்டம் வென்ற ரியா சிங்கா ….. மகுடம் சூட்டினார்.
மாணிகா ஏற்கனவே மிஸ் யூனிவர்ஸ் ராஜஸ்தான் என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார்.
இவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கான காரணம் இறுதி சுற்றில் பெண் கல்விக்காக போராடுவதா அல்லது பின்தங்கிய குடும்பங்களின் பொருளாதாரதிற்கு உதவி வழங்குவது என்றால் இவற்றில் எதை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு பெண் கல்வியை தேர்வு செய்வேன் அதற்கு காரணம் ஒரு பெண் கல்வி பெற்றால் இந்த சமூகத்தையே மாற்ற முடியும் என்று கூறினார்.
இவரது புத்திசாலித்தனத்திற்கு தான் இந்த மகுடம் அரங்கேறியது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
மாணிகா Political Science and Economics….இல் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.


