கரையான் அரித்த பணம்…. கூலி தொழிலாளி ..க்கு உதவிசெய்த ராகவா Lawrence
சேமித்த பணத்தை இழந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சிவகங்கை மாவட்டத்தின் அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான குமார் மற்றும் முத்து கருப்பாய்க்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், இவர்களின் காது குத்து விழாவிற்காக சிறுக சிறுக உண்டியலில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்.
அந்த உண்டியலை அவர் வீட்டிலேயே மண்ணுக்கடியில் புதைத்து வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் எட்டிருப்பதை பார்த்த அவர்கள் அந்த உண்டியலை மீண்டும் புதைத்து வைத்தனர்.
தீடிரென்று ஏற்பட்ட மழையின் காரணமாக உண்டியலுக்குள் கரையான் புகுந்து நோட்டுகளை அறித்திருக்கிறது சில நாட்களுக்கு முன்பு உண்டியலை திறந்து பார்த்த கருப்பாயி உடைந்துபோய் கதறி அழுத்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் அதனை பார்த்த ராகவா லாரன்ஸ் அந்த தம்பதியினரை அழைத்து அதே போல் ஒரு தகர பெட்டியில் ஒரு லட்ச ரூபாயை வைத்து அவர்களிடம் அளித்துள்ளார்.
கண்ணீருடன் பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.