புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொகுதி தலைவர்கள் 6 பேரில் 30 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து இரண்டாவது பட்டியலை ஆர். எல் . வெங்கட்ராமன் வெளியிட்டார்
புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 10 பேர் கொண்ட தொகுதிகளுக்கான தலைவர்களின் முதல் பட்டியலை வெளியிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து 6 தொகுதி தலைவர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்
தொகுதி தலைவர்களின் அறிமுகக் கூட்டம் N. சிவகுமாரன் தலைமையில் , கோமதி சங்கர் , J. சுப்ரமணியன், S. கவிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காலாப்பட்டு, ராஜ்பவன் , லாஸ்பேட்டை , இந்திரா நகர்,
மண வெளி, நெட்டப்பாக்கம் ஆகிய 6 தொகுதிகளுக்கான தலைவர்களையும், மாநில மகளிர் அணி பொது செயலாளராக திருமதி. டாக்டர். கீதாமணி அவர்களையும் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அவர்கள் அறிவித்தார். அவர்கள் அனைவரையும் வரவேற்று கட்சி துண்டு அணிவித்து போற்றி கவுரவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது லாஸ்பேட்டை தொகுதியை சார்ந்த பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 பெண்களுக்கு மேல் முருகன் தலைமையில் தங்களை ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்..
பெண்களுக்கு 30* *சதவீதம் வாய்ப்பு.!!!.
இதுவரை மொத்தம் 16 தொகுதிகளுக்கான தலைவர்களை நியமித்து உள்ளோம். அதில் 30 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 5 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளோம். தொகுதி தலைவர்கள் அறிமுக கூட்டத்தில் ஆர் எல். வெங்கட்ராமன் பேசியதாவது.!!!.
புதுச்சேரியில் மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று நலமுடன் வாழ்வதற்காகத்தான் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஆகவே நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து அதனை தீர்த்து வைக்க உண்டான வேலையை செய்ய வேண்டும்.
மக்கள் நலப்பணிகள் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேலும் ஆறு தொகுதி தலைவர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 16 தொகுதிகளுக்கான தலைவர்களை நியமித்து உள்ளோம். அதில் பெண்கள் 5 பேர் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தொகுதி தலைவர்களாக பொறுப்பு ஏற்று இருப்பவர்கள் தொகுதி நிர்வாகிகளை நியமிக்கும் போது மகளிருக்கு 30 சதவிகிதம் , கட்சியில் உணர்வு பூர்வமாக செயல் படுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
*ஆறு தொகுதிகளுக்கான தலைவர்களின் இரண்டாவது பட்டியல்* .
1 . காலாப்பட்டு :
V . அனிதா
2 . ராஜ்பவன் : S .தாயாரம்மா.
3 . லாஸ்பேட்டை :
முருகன்
4 . இந்திரா நகர் :
அதியமான்.
5 . மண வெளி :
S . தனலட்சுமி
6 நெட்டப்பாக்கம் :
வசந்தா தேவராசு
ஆகிய ஆறு தொகுதிகளுக்கான தலைவர்களின் இரண்டாவது பட்டியலை மாநில தலைவர் ஆர்.எல். வெங்கட்ராமன் வெளியிட்டார்.

