மேளம் தாளம் முழங்க புஷ்பலதாவுக்கு வரவேற்பு – உழவற்கரையில் தீவிர வாக்கு சேகரிப்பு
புதுச்சேரி உழவற்கரைத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்தியா கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் புஷ்பலதா, ஜே.ஜே.நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு மேளம்–தாளங்கள் முழங்க பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வு பகுதி முழுவதும் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புஷ்பலதா, “மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் உழவற்கரைத் தொகுதியில் போட்டியிடுகிறேன். மக்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த வெற்றி எனது தனிப்பட்ட வெற்றி அல்ல; என் கட்சி, தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி” என்று தெரிவித்தார்.
மேலும், “மதவெறி, சாதி வெறி அரசியலை மக்கள் நிராகரிக்கத் தயாராக உள்ளனர்.
மக்கள் சேவை செய்யும் நபர்களை தேர்வு செய்வார்கள்” என்றார்.
தொகுதி மேம்பாட்டை குறித்து பேசுகையில், “பகுதி மக்களின் கோரிக்கைப்படி சமூக நலக்கூடம் அமைத்து தருவேன். மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா பெற்று கொடுப்பேன்” என்று உறுதியளித்தார்.இதற்கு முன் இருந்த சட்டமன்ற உறுப்பினர் எந்த முக்கிய பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வு உழவற்கரை தொகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது….


