அட்லீ அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த புஷ்பா நடிகை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் AA22xA6, குறித்து நிறைய வதந்திகள் எழுந்துள்ளன.
அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீயின் வரவிருக்கும் சயின்ஸ்Fiction படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைகிறார்.
இந்த படத்தில் அவர் மிகவும் துணிச்சலான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
தீபிகா படுகோனேவும் நடிக்கும் இப் படத்தில், அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
” லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த Screen டெஸ்ட்..டில் ரஷ்மிகா ஏற்கனவே தனது தோற்றப் பரிசோதனை மற்றும் உடல் ஸ்கேன் ஆகியவற்றை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
“ரஷ்மிகாவைத் தவிர, இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான்வி கபூர் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்..
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ,.உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஸ்கிரிப்ட் பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அறிவிப்பு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர்.
ஐயன் மேன் 2 மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற VFX மேற்பார்வையாளர் ஜேம்ஸ் மடிகன், “நான் ஸ்கிரிப்டைப் படித்து முடித்துவிட்டேன், என் தலை இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.


