பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி
நாகை நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது திட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் கழிவுநீர் வெளியேறி சாலைகளிலும் குடியிருப்பு ஒட்டிய பகுதிகளிலும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களில் தேங்கும் மழை நீரால் சுமார் 20 நாள் வரையிலும் பாதாள சாக்கடை ஆங்காங்கே நிரம்பி வழிந்து பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும் இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாகை நகராட்சியின் 25வது வார்டு செம்மார கடை வடக்கு சந்து அந்தோனியார் கோவில் மேல் சந்து பகுதிகளில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலைகளின் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பலமுறை நகராட்சி இடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர்.


