in

கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷ்க்கு பொதுமக்கள் பாராட்டு

கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷ்க்கு பொதுமக்கள் பாராட்டு

 

இந்திய அணிக்காக ஆசிய இளையோர் கபாடி போட்டியில் விளையாடி தங்கம் வென்ற அபினேஷ்க்கு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பாராட்டு.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கட்சி சார்பில் எம்பி முரசொலி முயற்சியால், ஆசிய இளையோர் கபாடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கம் வென்ற அபினேஷ் அவர்களை பாராட்டி, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக மணிமண்டபம் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க அபினேஷ் அவர்களுக்கு சந்தன மாலை அணிவித்து ஊர் மக்கள் புடைசூழ ஊர்வலமாக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அபினேஷ்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

What do you think?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்