in

பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மனு..

பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மனு..

 

கும்பகோணத்தில் 100 மீட்டர் அருகில் 2 பூங்கா ஒரு பூங்கா பராமரிக்கப்படாததால் பூங்காக்குள் விஷப் பூச்சிகள், பாம்புகள் உள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் நகரவாசிகள் பலமுறை மனுக்கள் அளித்தும் பூங்கா பராமரிக்கப்படவில்லை தற்போது 100 மீட்டரில் இன்னொரு பூங்கா அவசியமா என்று கேள்வியும் மாநகரத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தையும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை.

கும்பகோணத்தில், 7வது வார்டு திருவள்ளுவர் நகர், 8வது வார்டு பெரியார் நகர், 14 வது வார்டு கணபதி நகர், 20 வது வார்டு பாரத் நகர் ஆகிய 4 வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளும் மற்றும் புணரமைக்கும் பணிகள் முடிவடைந்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தலைமையில் இன்று 4 பூங்காக்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இதில் 20 வது வார்டு பொன்னுசாமி நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் செடிகள் முளைத்து காடு போல் காட்சியளிக்கிறது.

விஷ பூச்சிகளும் மற்றும் பாம்புகள் உள்ளன. பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி மாநகராட்சியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து பூங்காவை பராமரிக்கவில்லை தற்போது 100 மீட்டர் அருகில் அடுத்த தெருவில் ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் கிராண்ட் சிட்டி, என்ற 2 வது பூங்கா தேவையா என்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறத்திலும் மற்றும் நகரப்புறத்திலும் பூங்கா அமைத்தால் மாணவர்களும் பொது மக்களும் பொழுதுபோக்காக அமையும் நகர புறத்தில் உள்ள அனைத்து பூங்காக்களின் பராமரிக்க வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கை என்று தெரிவித்தனர்.

What do you think?

யோகா பயிற்சியின் போது உணவு பண்டம் சாப்பிட்டு பள்ளி மாணவர்கள் வாந்தி, மயக்கம்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோபமடைந்த அமைச்சர் சி.வே. கணேசன்