சென்னை மற்றும் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது எஸ்.ஐ.ஆர் -ஐ செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி 16ஆம் தேதி சென்னை, திருச்சியில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ. ஆர். மூலம் தகுதி உள்ள தமிழக வாக்காளர்கள் பல லட்சம் பேர் நீக்க வாய்ப்பு உள்ளது.
அதற்கு மாறாக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கானோரை வாக்காளர்களாக சேர்த்து விடுவர். இந்திக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி அவர்களை நிரந்தர குடிமக்களாக மாற்றி தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக மாற்றும் சதித்திட்டமே இந்த எஸ். ஐ .ஆர். ஆகும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் எதற்கு இவ்வளவு அவசரமாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழர்களுக்கு வாக்குரிமை மறுத்துவிட்டு இந்திக்காரர்களுக்கு வாக்குரிமை வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையில் இந்திக்காரர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் வழியாக தமிழ்நாட்டு அரசியலில் செயற்கையான குறுக்கீட்டையும் குழப்பத்தையும் ஏற்பட்ட முனைகிறார்கள்.
இதுவரை கணக்கெடுத்த எஸ். ஐ ஆர் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது , வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது, தமிழர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காதே என்ற கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் வருகிற 16-ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.


