கமலஹாசன் போஸ்டரை எரித்து கர்நாடகாவில் ஆர்பாட்டம்
தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமலஹாசன் கூறிய கருத்திற்கு கர்நாடகாவில் சர்ச்சை கிளம்பி உள்ளது.
மே 24ஆம் தேதி மணிரத்தினம் இயக்கிய ThugLife படத்தின் ஆடியோ லான்ச் சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார் விழாவில் பேசிய கமலஹாசன் உயிரே உறவே தமிழே என்று பேசிய கமலஹாசன் தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று அவர் கூறிய கருத்து கர்நாடகாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அவரின் கருத்துக்கு நடிகர் சிவ ராஜ்குமார் கண்டனம் எதுவும் தெரிவிக்காததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தி கமலஹாசனின் ThugLife போஸ்டர்களை எரித்தனர். கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கமலஹாசனுக்கு வரலாறு தெரியாது என்று கூறியுள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியதால் படத்திற்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைக்குமா என்று கேள்வி எழுநதுள்ளது. கமலஹாசன் மன்னிப்பு கேட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அன்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது அரசியல்வாதிகள் இது குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று தனது நிலை பாட்டில் உறுதியாக இருக்கிறார் கமல்.
கமலஹாசன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சிவராஜ்குமார் கமலஹாசனுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பவர்கள் உண்மையான கன்னட மொழியின் வளர்ச்சிக்காக என்ன செஞ்சிருக்காங்க என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
மொழிப்பற்று உள்ளவர்கள் போல் நடிக்க கூடாது தாய் மொழி மீது உண்மையான காதல் இருக்க வேண்டும் என்றும் கன்னட மீதான எனது பற்று குறித்து யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.


