in

மோடி அரசை கண்டித்து தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மோடி அரசை கண்டித்து தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாட்டின் தாயகத்தை சீர்குலைக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் 6.5 லட்சம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களை வாக்காளராக சேர்க்க முயலும் தேர்தல் ஆணையத்தின் திட்டத்தை நிறுத்திட வேண்டும், தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றக்கூடாது, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாநகர செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு பழ.ராசேந்திரன், தலைமையில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

What do you think?

விளையாட்டு செய்திகள் – SPORTS NEWS

 ஸ்ரீ ராகவேந்திரனின் 354 ஆம் ஆண்டு ஆராதனை விழா