ஆண்டிபட்டியில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்
முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஆண்டிபட்டியில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் . பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி போராட்டத்தால் ஆண்டிபட்டியில் பரபரப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி சாலையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராடத்திற்கு ஓய்வு பெற்ற மூத்த ஊழியர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் .
போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கருப்புத் துணியால் முக்காடு போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினார்கள் .
போராட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான சிறப்பு பென்சன் அகவிலை படியுடன் சேர்த்து ரூபாய் 6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் ,
ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என்று திமுக அரசு சொன்ன தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 2.57 காரணியால் ரூபாய் 1500 பெருக்கி திருத்தி அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன
பெண்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் செய்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.