in

இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்

இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்

 

செஞ்சி அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின பெண்களால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின பெண்களால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெப உதவி கிராமத்தை சேர்ந்த சுமார் 120க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என மனுக்கள் அளித்த வந்த நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் இருந்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தும் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் அலைகழித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம பட்டியலின பெண்கள் 50- க்கும் மேற்பட்டோர் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

What do you think?

கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் போக்குவரத்து காவல் உதவி காவல் ஆய்வாளர்

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் வாக்குவாதம் செய்த பயணி