in

தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் 13 தொழில் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நாகப்பட்டினத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு போராட்டம்; சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்:

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அதிகரிக்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழகத்தில் ஆளும் கட்சியான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி ஆகிய தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

What do you think?

நாகூர் நாகநாத சுவாமி ஆலய தேரோட்டம்

கமல்.. போல் மீண்டும் மொழி பிரச்சனையை உருவாக்கிய பேரரசும்