in

பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்

பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், கூட்டமைப்பின் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று முதல் கால வரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக    

வழங்கப்படாத ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்கிட வேண்டும் எனவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் என்.எம்.ஆர். தொகுப்பூதியர் மற்றும் தின கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்களின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தொடர் உள்ரிப்பு போராட்டத்தை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

பேராசிரியர்கள் ஊழியர்கள் போராட்டம் துவங்கிய நிலையில் மாணவர்களின் கல்வி பயில்வது கேள்விக்குறி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது எனவே உயர் கல்வித்துறை அதிகாரிகள் அமைச்சர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது மாணவர்களின் கருத்தாக உள்ளது.

What do you think?

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க கோரி புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்