மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த பேராசிரியர்கள்
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் சாதனை.. மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த பேராசிரியர்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனத்தின் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் சாதனை புரிந்துள்ளனர்.
மாணவர்களை வாழ்த்தியும் மேலும் பேராசிரியர்கள் மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மாணவர்களுடன் இணைந்து ஸ்ரீரங்க பூபதி கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி தலைமையில், செயலாளர் ஸ்ரீபதி முன்னிலையில், கல்லூரி முதல்வர் பாவேந்தர், துணை முதல்வர் முருகதாஸ் மற்றும் பேராசிரியர்கள் சத்தியமூர்த்தி ஜெயசித்ரா உள்ளிட்ட பேராசிரியர்கள் கேக் வெட்டியும் பிரியாணி விருந்து வைத்து அசத்திய சம்பவம் நடைபெற்றது.
இன்ஜினியரிங் பிரிவில் படித்து வந்த மாணவர்கள் முழு தேர்ச்சி விகிதத்தை அடைந்ததை கொண்டாடும் வகையில் மாணவர்களை வாழ்த்த முன்வந்த பேராசிரியர்கள் மாணவர்களுடன் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய பின் பேராசிரியர்களே மாணவர்களுக்கு பிரியாணி விருந்தளித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற ஊக்கமளித்து வாழ்த்தினர்.
இச்சம்பவத்தால் நெகிழ்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பேராசிரியர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.