Watch – YouTube Click
படபிடிப்பில் பிரியங்கா சோப்ரா…விற்கு விபத்து
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஜிம்மி ஃபாலன் நடிக்கும் அதிரடி-நகைச்சுவை படமான ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்டின் (Heads of State) Promotion நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது வரவிருக்கும் படமான ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி வெளிபடையாக பகிர்ந்து கொண்டார்.
நான் நடித்து கொண்டிருக்கும் போது “கேமரா ஆபரேட்டர் கொஞ்சம் அருகில் வந்தார், நானும் கொஞ்சம் அருகில் சென்றேன் , பூம்!(boom)…. மேட்டில் பாக்ஸ் (Mattle box) என் புருவத்தை கிழித்து ஒரு துண்டை எடுத்தது.
என் கண்ணை எடுக்காதது எனது அதிர்ஷ்டம்.” என்று கூறினார்.
அறுவை சிகிச்சை பசையைப் பயன்படுத்தி காயத்தை அந்த இடத்திலேயே சரி செய்ததாக தெரிவித்தார்..பிரியங்கா