in

தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி

தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி.

 

மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்படுவதாக தெரிவித்து,மாணவிகள் பெற்றோருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாலக்கரை பகுதியில் வேதா நர்சிங் பள்ளி என்ற தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் பயின்று வருகின்றனர்.

இந்த நர்சிங் கல்லூரி மிகவும் குறுகலான இடத்தில், போதிய இடவசதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், பயிற்சிக்காலம் முடிவுற்று கல்லூரியை விட்டு செல்வதற்கு, சேரும் பொழுது சமர்ப்பித்த ஒரிஜினல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் திரும்பத் தராமல் இருப்பதாகவும் தொடர்ந்து மாணவிகளை தகாத முறையில் திட்டி அவதூறு பரப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரிஜினல் சான்றிதழ்களை பராமரிக்கும் நிர்வாகத்தினருடன் இன்று மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் சான்றிதழை வழங்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரம் கலைக்கல்லூரியில் இரு மாணவிகளுக்கு திருமூலர் விருது

கோழியை கொன்று, கோழி முட்டைகளை விழுங்கிய கருநாகப் பாம்பு