Prebooking..கில் பட்டைய கிளப்பும் குபேரா
தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் வரவிருக்கும் குபேரா ஜூன் 20, 2025 அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட திரையரங்க டிரெய்லர் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்தது.
முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் ,. கடந்த 24 மணி நேரத்தில், குபேரா புக் மை ஷோ போர்ட்டலில் மட்டும் 12,000 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்றுள்ளது.
வரும் நாட்களில் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தனுஷ்.. எராளமான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்க்கும் நபராக இருந்தாலும், படத்தில் கிங் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியது.
மூத்த தயாரிப்பாளர்களான சுனில் நரங் மற்றும் பி. ராம் மோகன் ராவ், சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர். பிரீ புக்கிங்கில் இதுவரை உலக அளவில் மூன்றரை கோடி வசூல் செய்திருக்கிறது.