நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் சித்திரை மாத பெளர்ணமி படி பூசை
நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் சித்திரை மாத பெளர்ணமி படி பூசை,முருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரம் மயில்வாகனத்தில் புறப்பாடு ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார்.
சித்திரை மாத பெர்ணமிதினத்தை முன்னிட்டு காலை திருக்கோவில் முன் உள்ள படிகளுக்கு படி பூஜையும் பின்னர் மூலவர் முருகப்பெருமானுக்கு கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
பின் மாலை உற்சவ முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது வழிநெடுக பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
காலை முதல் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.