பண்ருட்டியில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை படித்து சென்ற நபரை காவல்துறையினர் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 மணி நேரத்திற்குள் துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்கள் துணிந்து வருகிறது.துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திராசுபகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற 75.வயதான மூதாட்டி நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வெள்ளை நிலத்தில் மயங்கி கிடந்ததாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் அப்போது அவரிடம் அங்கிருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சௌமியா அதே பகுதியில் உள்ள விளைநிலத்திற்கு சென்ற போது அவர் அணிந்திருந்த நகையை மர்ம போதை ஆசாமிகள் கேட்டதாகவும் தர மறுத்ததால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்து சென்றதாக கூறியுள்ளார்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவுலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பண்ருட்டி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா அவர்களின் தலைமையிலான மூன்று தனிப்படை அமைத்து இவ்வழக்கை விசாரித்து உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியில் கிடந்த ஆண் நபர் அணியக்கூடிய உள்ளாடை மற்றும் சந்தேகிக்கும் வகையில் கிடந்த இருசக்கர வாகனத்தை வைத்து அந்த வாகனத்தில் பயணித்த நபர் யார் எங்கிருந்து வந்தது என சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட வாகனத்தை ஒரு நபர் ஊற்றி செல்லும் காட்சி பதிவான நிலையில். அந்த காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.கே.பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரவேல் என்பதும் அவர் மீது கள்ளக்குறிச்சி விழுப்புரம் ,கடலூர் ,புதுக்கோட்டை ,புதுவை மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் சுந்தரவேல் கொள்ளை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இரண்டு நாட்கள் ஆகின்றது என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடனடியாக சுந்தரவேலின் கைபேசியை காவல்துறையினர் ட்ராக் செய்து வந்ததாகவும் அப்போது பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியில் சுந்தரவேல் கைபேசி சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது உடனடியாக பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் வேலுமணி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மேல்மாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருந்த சுந்தரவேலை காவல்துறையினர் சுற்றிவழித்தபோது காவல்துறையினர் மீது கத்தியை கொண்டு சுந்தரவேல் தாக்கியதில் குபேந்திரன் என்ற காவலர் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, ஹரிஹரன் என்ற காவலர் மீது தாக்க முயன்ற போது காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆய்வாளர் வேலுமணி, சுந்தரவேலை துப்பாக்கியால் சுட்டதில் இடது காலில் சுந்தரவேல் பலத்த காயமடைந்துள்ளார் உடனடியாக காவல்துறையினர் வாகனத்தில் காயமடைந்த காவலர்கள் மற்றும் குற்றவாளி சுந்தரவேலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. காலில் பலத்த காயமடைந்த சுந்தரவேலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் மூதாட்டி சௌமியா அணிந்திருந்த நகை கவரிங் என்பதும் மூக்குத்தி மட்டும் தங்க நகை என்பதும் சுந்தரவேல் ஒரு நபர் மட்டும் மூதாட்டி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் கூடுதலாக அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை ஏற்றுக் கொண்டு வருவதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்த காவலர்கள் குபேந்திரன், ஹரிஹரன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். 75 வயது மூதாட்டியை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்து நகையைப் பறித்து சென்ற குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்துடன் விரைந்து செயல்பட்ட கடலூர் மாவட்ட காவல் துறையினருக்கு அப்பகுதி நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பாராட்டுகளை குறித்து வருகின்றனர்.