in ,

110 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடி கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக 110 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலகுடி மேம்பாலம் கீழே அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சந்தேகம் படும்படி மூன்று இளைஞர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்த போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் கடலூர் சுனாமி நகரை சேர்ந்த ஆனந்தராஜ், கடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ஆண்டான் பாலசிங்கம், ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளவரசன், ஆகியோர் என்பது தெரியவந்தது.

 

 

பின்னர் போலீசார் அந்த மூன்று இளைஞர்களிடம் கிடக்கு பிடி விசாரணை செய்ததில் அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதற்காக காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்த 110 போதை மாத்திரைகளும் 40 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பல்வேறு குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வரும் நிலையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ய வந்த இளைஞர்களை போலீசார் ரோந்து பணியின்போது வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

What do you think?

கோவிலை இடித்த போலீசார் மீது மண்ணை வாரிவிட்டு சாபம் விட்டு கதறி அழுத பெண்கள்.

விருதுநகரில் நோட்டு போட்டு தீயணைப்பு துறையினர் தீபாவளி வசூல் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பறிமுதல்…