இட ஒதுக்கீட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால், 400க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 வன்னியர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் செப்டம்பர் 17 ஆம் தேதி, அதாவது “தியாகிகள் தினமாக” அனுசரிக்கப்பட்டு, உயிரிழந்த தியாகிகளின் நினைவாக மலர்தூவி மரியாதை செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு பனையபுரம் ,கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார் .
இதனையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


