in

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம்

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம். கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட்டார்

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பிரச்சாரம் இன்று மாலை சிதம்பரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வந்த அவர் கனகசபைக்கு சென்று கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட்டார். அவருக்கு கோயில் தீட்சிதர்கள் சாமி தரிசனம் செய்து வைத்தனர்.

பின்னர் கோயில் தீட்சிதர்கள் அன்புமணி ராமதாசுக்கு மாலை அணிவித்து பிரசாதங்களையும் வழங்கினர். இதையடுத்து நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்த அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்று விட்டார்.

What do you think?

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா ஆரம்பம்