in

நான் போடும் பதவி தான் கடைசிவரை உங்களை யாராலும் மாற்ற முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக கரூர் மாவட்ட செயலாளர் கரூர் பாஸ்கர் பேட்டி

நான் போடும் பதவி தான் கடைசிவரை உங்களை யாராலும் மாற்ற முடியாது என ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக கரூர் மாவட்ட செயலாளர் கரூர் பாஸ்கர் பேட்டி

பாமகவில் டாக்டர் ராமதாசிற்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவருக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது இந்த நிலையில் இன்று தென் மாவட்டச் சேர்ந்த 17 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது அப்போது ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் செய்தியாளரை சந்தித்தார் நான் போடும் பதவி தான் கடைசி வரை உங்களை யாராலும் மாற்ற முடியாது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூறினார்

மேலும் இன்று அழைப்பு விடுத்தப்பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்று உள்ளனர் மேலும் பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்டது வரவேற்பு தக்கது என கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தெரிவித்தார் மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன சொல்கின்றாரோ அதனை அனைவரும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

What do you think?

ஒன்றிய அரசை கண்டித்து நாளை மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி பேட்டி

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்