ஸ்ரீ நடேசா நாட்டிய கலைக்கூட பயிற்சி மையம் சார்பில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை
ஸ்ரீ நடேசா நாட்டிய கலைக்கூட பயிற்சி மையம் சார்பில் பயிற்சி பெற்ற பரதநாட்டிய மாணவிகளின் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை
கடலூர் மாவட்டம், வடலூரில் ஸ்ரீ நடேசா நாட்டிய கலைக்கூட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பரதநாட்டிய மாணவிகளின் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை
விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நாட்டியாஞ்சலி விழாவில் ஸ்ரீ நடேசா இசை நாட்டிய கலைக்கூடத்தில் பரதநாட்டிய பயிற்சி பெற்ற மாணவிகள் குழுக்களாக நடனம் மேற்கொண்டனர்.
இதில் சிறப்பாக வள்ளலார் வாழ்ந்த பூமியில் வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக வள்ளலாரின் திருவருட்பா பாடல் இசைக்கு வள்ளலார் வேடம் அணிந்த சிறாரை காட்சிப்படுத்தி பரதநாட்டிய மாணவர்கள் நடனமாடியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்த நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மற்றும் நினைவு பரிசை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவபடுத்தினர்.


