in

வண்டலூரில் திறக்கபடாமல் கிடக்கும் புதிய நியாயவிலை விலை மக்கள் கோரிக்கை

வண்டலூரில் திறக்கபடாமல் கிடக்கும் புதிய நியாயவிலை விலை மக்கள் கோரிக்கை

 

நாகை அருகே வண்டலூரில் திறக்கபடாமல் கிடக்கும் புதிய நியாயவிலை விலை கட்டிடம்; 2 ஆண்டுகளுக்கு மேலாக நூலக கட்டிடத்தில் செயல்படும் கடையினை புதிய கட்டிடத்தில் மாற்ற கிராம மக்கள் கோரிக்கை.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் கடந்த 2022- 23 ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை திட்டம் சார்பில் புதிய நியாயவிலை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடடம் திறக்கப்படாமலே உள்ளது.

மேலும் தற்போது தற்காலிகமாக நூலக கட்டிடத்தில் செயல்படும் நியாயவிலை கடையால் மாணவர்கள் நூலகத்திற்கு சென்று படிக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் முதியவர்கள் கை ரேகை வைக்க மிகவும் சிரம்பட்டு வருகின்றனர். புதிய கட்டிடம் பழைய கட்டிடமாக மாறி போன நிலையிலும் திறக்கபடாமல் கிடக்கும் கட்டிடடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

அரசடி விநாயகர் திருக்கோயில் 62-ஆம் வருட ஸம்வத்சராபிஷேக விழா

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை