in

மின்சாரம் தாக்கி காயமடைந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மின்சாரம் தாக்கி காயமடைந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

 

வடலூர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ஆண் மயிலை மீட்டு கிராம மக்கள் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

வடலூர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக அதிக அளவில் மயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆண் மயில் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பறக்கும் போது மேலே செல்கின்ற மின்சார கம்பியில் பட்டு கீழே விழுந்து கிடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மயிலை மீட்டு வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த வடலூர் போலீசார் மயிலை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, கடலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரியிடம் மயிலை ஒப்படைத்தனர்.

What do you think?

தென் மேற்கு பருவ மழை மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

இன்று வெளியாகுமா கூலி First சிங்கள்